பேராவூரணி அருகே உள்ள இரண்டாம்புளிக்காடு கோயில் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் செல்போன் டவர்மீது ஏறி குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என கோயில் பூசாரி எச்சரிக்கைவிடுத்துள்ளார். இதுகுறித்து அவர் குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர் மற்றும் சேதுபாவாசத்திரம் காவல்நிலையம் மற்றும் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
பேராவூரணி அருகேயுள்ள இரண்டாம்புளிக்காட்டில் பாரம்பரியமாக வழிபட்டு வரும் முனீஸ்வரர் கோயில் உள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன் இரண்டாம்புளிக்காடு, மல்லிப்பட்டினம் சாலையில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அப்பகுதி பொதுமக்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு மாற்றி முனீஸ்வரர் கோயில் அருகே கடந்த மாதம் திறந்துள்ளனர். கோயில் அருகே கடை திறக்கக்கூடாது என தடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் கடையை அப்புறப்படுத்த கோரி மறியல் போராட்டம் நடத்தியும் இதுநாள் வரை எவ்வித பயனும் கிடையாது. பூஜை பரிவாரங்கள் செய்து வரும் எங்கள் கோவில் அருகிலுள்ள டாஸ்மாக் கடையை இன்னும் 10 தினங்களுக்குள் அப்புறப்படுத்தாவிட்டால் வரும் 6ம்தேதி இரண்டாம்புளிக்காட்டில் உள்ள செல்போன் டவர்மீது ஏறி குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என அம்மனுவில் கூறியுள்ளார்.
பேராவூரணி அடுத்த இரண்டாம்புளிக்காடு கோயில் அருகிலுள்ள மதுக்கடையை அகற்றாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்.
டிசம்பர் 28, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க