பட்டுக்கோட்டை மாற்றுத்திறனாளிகள் போராட்டம்.
டிசம்பர் 02, 2017
0
ஊனமுற்றோர் உரிமைச் சட்டம்-2016 ஐ மாநிலங்களில் அமல்படுத்தஏதுவாக மாநில அரசு சட்டம் இயற்றி விதிமுறைகளை உருவாக்க வேண்டும். உதவித்தொகை கோரி விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளின் விண்ணப்பங்களை பரிசீலித்து உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுஅனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வெள்ளியன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்புகொட்டும் மழையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.இந்த தர்ணா போராட்டத்திற்கு சேதுபாவாசத்திரம் ஹெச்.ஜலீல்முகைதீன் தலைமை வகித்தார்.க.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க