அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்துக்கு எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் நின்று அனுமனை பக்திப்பெருக்குடன் வழிபட்டனர். முன்னதாக, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.