'இந்தியா ஒரு விவசாய நாடு’ என்ற பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் அரசாங்கங்கள், விவசாயத்தை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாக நாட்டை வீழ்ச்சியில்தான் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் போதிய ஆதரவு இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விரக்தியோடு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம், 'விவசாயம் இனி இளைஞர்கள் கைகளில்’ என்ற 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் கூற்றை உண்மையாக்கும் வகையில் வருங்கால தலைமுறையின் கவனம் விவசாயத்தின் பக்கம் திரும்பி வருவது, ஆரோக்கிய மாற்றம்.
விவசாயம் பெருமதிப்புமிக்கதாக நாளாக மாற விவசாயத்தையும், விவசாயிகளுக்கும் இந்த சிறப்பு மிக்க நாளில் வணக்கத்தையும், வாழ்த்துகளை பகிர்வோம்.