விவசாயிகள் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் பெரியதெற்குக்காடு நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வீரம்மாள் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இராமநாதன் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு 50 வேம்பு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியைகள் காந்திமதி, ஜெயந்தி, ரஞ்சிதா, குளோரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நன்றி: தீக்கதிர்
விவசாயிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்.
டிசம்பர் 24, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க