சூப்பர் மூன் எனப்படும் பூமிக்கு அருகில் நிலவு வரும் நிகழ்வு ஞாயிறு இரவு நடக்கிறது.
டிசம்பர் 03, 2017
0 minute read
0
சூப்பர் மூன் எனப்படும் பூமிக்கு அருகில் நிலவு வரும் நிகழ்வு ஞாயிறு இரவு நடக்கிறது.
இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின் போது நிலவு தனது வட்டப்பாதையில் வழக்கத்தை விட 50 ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை பூமியை நெருங்கி வருவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நிலவு வழக்கத்தை விட 7 முதல் 15 சதவீதம் பெரியதாக தெரியும் என்றும், சாதாரண கண்களால் பார்க்கலாம் என்றும் நாசா கூறியுள்ளது.
மேலும் டிசம்பர் மாதம் வருவதால் இதனை குளிர் நிலவு என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது. இதேபோல் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி சூப்பர் மூன் நிகழ்வும், டிசம்பர் 31ஆம் தேதி ப்ளட் மூன் எனப்படும் செந்நிற நிலவு தெரியும் நிகழ்வும் நடக்கவிருப்பதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க