பேராவூரணி நகரை அழகுப்படுத்தும் வகையில் பேரூராட்சி சார்பில் பேராவூரணி ரெயில் நிலையம் அருகே செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டது. இது பேராவூரணி பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. தற்போது நீரூற்றை சுற்றிலும் தண்ணீர் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதுடன் செயற்கை நீரூற்று செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
பேராவூரணியில் செயல்படாத செயற்கை நீரூற்று.
டிசம்பர் 25, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க