நம்ம ஊரு பேராவூரணி.
டிசம்பர் 07, 2017
0
தஞ்சாவூர் இருந்து 72 கிமீ தொலைவும், புதுக்கோட்டை இருந்து 50 கிமீ, அறந்தாங்கி இருந்து 27கிமீ, பட்டுக்கோட்டையில் இருந்து 18 கிமீ தொலைவுல இருக்கு ஊர் பேராவூரணி.
பஞ்சம்னா என்னானு தெரியாத ஊர் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை என எந்த பகுதி வறண்டு போனாலும் பேராவூரணிக்கு மட்டும் வறட்சியே கிடையாது
மழை காலத்தில் கிணறு நிரம்பி தண்ணீர் வெளிய வந்துருக்கு நானே பார்த்திருக்கேன் அந்த அளவுக்கு செழிப்பு மிக்க பகுதி கோடை காலம் அந்த மூன்று மாதம் கழித்து பார்த்தால் ஒரு குட்டி கேரளாதான் பேராவூரணி.
பொள்ளாச்சிக்கு அடுத்து அதிகமான தென்னை மரங்கள் அதிக அடர்த்தியான அளவில் உள்ள பகுதி பச்சை போத்தியதுபோல் இருக்கும்
சோழ தேசம்ன்றதுக்கு ஒரு எடுத்துக்காட்டுன இந்த ஊர சொல்லிவிடுலாம் அந்த அளவிற்கு விவசாயம். என்ன பயிர் விதைத்தாலும் வளரும் என்ன மரங்கள் நட்டாலும் வளரும் , தேங்காய், வாழை கயிறு சம்மந்தப்பட்ட தொழில் அதிகம் நடக்கும்
பக்கத்துல 10 கிமீல கடல் அங்க மனோரான்னு ஒரு சுற்றுலா தளமா இருந்து தற்போது கவனிப்பாரற்று இருக்கு அடுத்த ஊர்கள் அதிராம்பட்டினம் நாகப்பட்டினம்
விவசாயம் எந்தஅளவிற்கு செழிப்போ அதேபோல மீன்வளமும் செழிப்பு நிறைந்த கடல் பகுதி இறால் வளர்ப்பு அதிகம்
பெரும் அளவில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதி மத நல்லிணக்கம் வாழும் பகுதி , சாதிய ஆதிக்கம் அதிகம் இல்லாத பகுதி இருப்பினும் ஒரு சாதி ஆதிக்கம் உண்டு ஆனாலும் தெற்கே போல பிரிவினைவாதம் கிடையாது சண்டை சச்சரவுகளும் கிடையாது அமைதியான ஊர்.
அரசியல் தொழிலில் அந்த ஒரு பிரிவினரின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் ஆனாலும் அவர்களால் பிரச்சனை ஏற்படாது ரொம்ப அமைதியான இடம்
கிரிக்கெட் சூப்பரா விளையாடக்கூடியவர்கள் ஒரு காலத்தில் இப்போ எல்லாம் செல்பி எடுத்துட்டு சுத்துறானுவ
நம்ம Vijay TV DD சிறுத்தை சிவா , பாலா போன்றவர்களோட சொந்த ஊரும்கூட
தமிழ்நாட்டுல எல்லா மாவட்டத்துக்கும் போய்ட்டேன் நீ பார்த்ததுலயே பசுமையான ஊர் எதுன்னு கேட்டா கண்ணமூடிட்டு சொல்லுவேன் பேராவூரணின்னு அது உண்மையும் கூட ஏன்னா என் ஊர் அதுவும்தான்
ஆனால் இப்போ நிலத்தடிநீர் கீழ போயிருச்சு மற்றபடி அப்படியேதான் இருக்கு
என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு போல வராது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க