பேராவூரணி வட்டாரத்தில் 2017-18 தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பவர்டில்லர் மற்றும் ரோட்டவேட்டர் கருவிகள் மற்றும் உளுந்து பயிரில் செயல்விளக்கங்கள் அமைப்பதற்குண்டான இடுபொருட்கள் விநியோகித்தல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. பேராவூரணி வேளா ண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற முகாமிற்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் வரவேற்றார். பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்களின் கீழ் ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் மானிய மதிப்பிலான 7 பவர் டில்லர்களும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மானிய மதிப்பிலான 4 ரோட்டவேட்டர் கருவிகளும், ரூ.75 ஆயிரம் மானிய மதிப்பிலான உளுந்து தனிப்பயிர் சாகுபடி செயல்விளக்கங்களுக்கான உளுந்து விதை, திரவ உயிர் உரங்கள் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி ஆகிய இடுபொருட்களையும் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு விவசாயிகளுக்கு வழங்கினார்.
நன்றி:தீக்கதிர்
மானிய விலை விவசாய கருவிகளை மா.கோவிந்தராசு எம்எல்ஏ வழங்கினார்.
டிசம்பர் 30, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க