ஆவணத்தில் பூட்டியே கிடக்கும் காவல்துறை கண்காணிப்பு அறை.
டிசம்பர் 05, 2017
0
பேராவூரணியை அடுத்த ஆவணம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கைகாட்டி பகுதிகளுக்கு இடையே, தஞ்சை மாவட்ட எல்லையான ஆவணத்தில் குற்றச்செயல்களை தடுக்கவும், திருட்டுகள், விபத்துகள் போன்றவற்றை கண்காணிக்கவும் கடந்த2 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை கண்காணிப்பு அறைஅமைக்கப்பட்டது.அப்போதைய பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தீபா கர்னேகர் (ஐபிஎஸ்) ஏற்பாட்டில் இந்த அறை அமைக்கப்பட்டது. இந்நிலையில் தீபா கர்னேகர் பணியிட மாறுதலில் சென்று விட்டதால் கண்காணிப்பு அறை திறக்கப்படாமலே உள்ளது.
காவல்துறை அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் விசாரித்தபோது, ‘உயர் அதிகாரிகள் திறந்து வைப்பதற்காக’ காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆவணம் பகுதி மக்கள் கூறுகையில், “ அதிகாரிகளின் வருகைக்காக காத்திராமல் உடனடியாக கண்காணிப்பு அறையை திறக்க வேண்டும். மழை, வெயிலில் கிடந்து பயன்படுத்தப்படாத அறை மற்றும் மின்னணு சாதனங்கள் வீணாகிறது. எனவே முக்கியத்துவம் வாய்ந்ததஞ்சை- சாயல்குடி மாநில நெடுஞ்சாலையில் பாதுகாப்புகருதி உரிய காவலர்களை நியமித்து கண்காணிப்பு அறையை திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
நன்றி:தீக்கதிர்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க