ஒக்கி புயலால் தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
டிசம்பர் 02, 2017
0
தமிழகத்தில் ஒக்கி புயல் எதிரொலியாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தஞ்சாவூர் மாவட்ட மீனவ கிராமங்களில் இருந்து, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டுப்படகுகள் மூலமாக 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். தற்போது வங்காள விரிகுடா கடல் பகுதியில் கன்னியாகுமரி அருகே புயல் சின்னம் உருவாகி தென்மாவட்டங்களில் கடுமையான மழை மற்றும் சூறாவளி காற்று வீசி பலத்த சேதத்தை ஏற்படுத்திஉள்ளது. மேலும் ஒக்கி புயல் காரணமாக மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம்என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. கடலுக்கு செல்ல மீனவர்களுக்குமீன்வளத்துறை சார்பில் ஒப்புகை(டோக்கன்) இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக கடற்கரை மற்றும்துறைமுகப்பகுதிகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், ஐஸ் கட்டி தயாரித்தல், கடற்கரைஓரங்களில் தேநீர் கடை, சிற்றுண்டி கடை நடத்துவோர், மீன் வியாபாரிகள், சிறு தலைச்சுமை மீன் விற்கும் பெண்கள் என மீன்பிடித் தொழில் சார்ந்த ஏறத்தாழ 20 ஆயிரம் பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். கடல் சீற்றம்காரணமாக அன்றாடம் தொழில் செய்யும் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க