பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு தீ விபத்தில் கூரை வீடு எரிந்து நாசம்.
டிசம்பர் 12, 2017
0
பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு கிழக்குப் பகுதியில், திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த திருவேங்கடத்திற்கு சொந்தமான தோப்பில் கூலித்தொழிலாளி ஞானசிகாமணி (55), தனது மனைவி ரத்தினத்தம்மாளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை காலை கணவன் - மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். மதியம் திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது. வீட்டின் அருகே வேலை பார்த்துகொண்டிருந்த பாலசுப்பிரமணியன் வீடு எரிந்ததை பார்த்து, தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றார்.
பின்னர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில், வீட்டிலிருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம், 15 பவுன் நகை, வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து பேராவூரணி போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க