புனல்வாசல் மாட்டு வண்டிப்பந்தயம் நடத்த அனுமதி கோரி மறியல்.
டிசம்பர் 10, 2017
0
பேராவூரணி அருகே புனல்வாசல் கிராமத்தின் சார்பில் மாட்டு வண்டிப் பந்தயம் நடத்த கடந்த 6 மாத காலமாக விழாக்குழுவினர் முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்காக வருவாய்த் துறை, காவல் துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளிடம் முறைப்படி விண்ணப்பித்து அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடைசி நேரத்தில் விழா நடத்த அனுமதி இல்லை என அதிகாரிகள் மறுத்து வந்ததாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை சாலையில் பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க