பட்டுக்கோட்டையில் மாபெரும் நலம் காக்கும் நடைப்பயிற்சி விழிப்புணர்வு பேரணி நடைபெற இருக்கிறது. பட்டுக்கோட்டையில் 23.12.2017 சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் பேருந்துநிலையம் அருகில் பொதுமக்களுக்கு நடைபயிற்சி குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் பட்டுக்கோட்டை பகுதியின் சிங்கப்பூர் வாழ் மக்கள்,மனோரா ரோட்டரி சங்கம்,கோட்டை ரோட்னரி சங்கம்,பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம்,மிட்டவுன் ரோட்டரி சங்கம்,லயன்ஸ்,ஜேசிஸ்,விதைகள் அமைப்பு,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,பட்டுக்கோட்டை நடைபயிற்சியளர்கள் மன்றம்,பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலசங்கம் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.