சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகர் கொட்ல விஜயபாஸ்கர் ரெட்டி உள்விளையாட்டரங்கில் டிசம்பர்22, 23, 24 ஆகிய தேதிகளில் கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா,துபாய், நார்வே, குவைத் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இதில் கட்டா குமிட்டே பிரிவு போட்டியில், பேராவூரணி தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் ஜே.அமிர்தத் மணிசங்கர் (உடையநாடு இராஜராஜன் பள்ளி மாணவர்) இரண்டு தங்கப்பதக்கம்,எஸ்.அகிலன் ஒரு தங்கம்,ஒரு வெண்கலம், ஜி.ஈஸ்வரன் ஒரு தங்கம், எஸ்.ஷாலினிஒரு வெண்கலம் ( மூவரும்கொன்றைக்காடு அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்கள்) ஆகியவற்றை வென்றனர். மேலும் தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் கே.பாண்டியன் சிறப்பு பயிற்சி பெற்றதற்காக, ஆஸ்திரேலியாவை சேர்ந்த தலைமைப் பயிற்சியாளர் வேய்ன் மெக் டோன்லா பாராட்டி சான்றளித்து கௌரவித்தார்.போட்டிகளில் பங்கேற்றுவெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் கே.பாண்டியனை கொன்றைக்காடு அரசுஉயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கொன்றை எஸ்.கே.இராமமூர்த்தி மற்றும் கராத்தே பயிற்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கிராமத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு.
டிசம்பர் 31, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க