பனைமரம் மற்றும் அதன் அனைத்துப் பகுதிகளுமே மனிதகுலத்துக்கு அதிகம் பயன்தரக்கூடிய ஒரு விருட்சமாகும். சித்தர்கள் சொல்கின்ற முறையில் குறிப்பிட்ட கால அளவில் சாப்பிட்டு வந்தால் மனிதன் நெடுநாள் ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கும் . பனங்கிழங்கு பொதுவாக நார்கள் நிறைய காணப்படும் நார்ச்சத்து அதிகம் உள்ள பகுதியாகும் . இதனைச் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும் .
பனங்கிழங்கின் மருத்துவப் பயன்கள்பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது.மலச்சிக்கலைத் தீர்க்கக் கூடியது.பனங்கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டி சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும்.
கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் பருமனாகும். பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும்.
பனங்கிழங்கு நன்மைகள்.
டிசம்பர் 17, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க