பேராவூரணியில் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சி.
டிசம்பர் 07, 2017
0
பேராவூரணியில் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநில கொள்கைபரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன் தலைமையில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சித.திருவேங்கடம், தா.கலைச்செல்வன், சுப.செயச்சந்திரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தோழர்கள் ஏனாதி சம்பத், ஆயில் மதியழகன், இரா மதியழகன், ரெட்டவயல் மாரிமுத்து, கிறித்தவ நல்லெண்ண இயக்க பொறுப்பாளர் ஆயர் த.ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்தனர். நிகழ்வில் சமூக நீதிக்கு எதிராக மநுநீதியை நிலைநிறுத்த நினைக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் பெண்ணுரிமை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம் போன்றவற்றைப் பாதுகாத்திட அம்பேத்கரின் வழிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
நன்றி: மெய்ச்சுடர்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க