தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு செய்வதென்பது தொன்றுதொட்டு வரும் பழக்கம்.
மார்கழி அதிகாலையில் வானமண்டலத்தில் பூமியை ஒட்டிய காற்றுமண்டலத்தில் O3 என்று விஞ்ஞானிகள் குறிப்பிடும் தூய ஆக்ஸிஜன் அடர்த்தியாக வியாபித்து இருக்கும்.
அந்த நேரத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதால், தூய ஆக்ஸிஜன் நிரம்பிய காற்றை சுவாசிக்க முடிகிறது.