பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி.
டிசம்பர் 15, 2017
0
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) ராணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தூய்மைப்பணியை தொடங்கி வைத்தார். திட்ட அலுவலர் முனைவர் பழனிவேலு வரவேற்றார்.
நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் தலைவர் தினேஷ் தலைமையிலான 40 பேர் கொண்ட குழுவினர் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இதில் கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க