தஞ்சையில் சலங்கைநாதம் கலைவிழா தென்னக பண்பாட்டு மையம் சார்பில்.

Unknown
0
தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சலங்கைநாதம் தேசிய நாட்டுப்புற கலைவிழா தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில்  தொடங்கியது. இந்த கலைவிழா வருகிற 1-ந் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.இந்த கலைவிழாவையொட்டி பல்வேறு மாநில கலைஞர்களின் கைவினைப்பொருட்கள், பாரம்பரிய உணவுகண்காட்சி மாலை 3 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த கலைவிழாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், மிசோரம், நாகலாந்து, மேகாலயா, அருணாச்சலபிரதேசம், ஜார்கண்ட், மணிப்பூர், உத்தரகாண்ட், சத்தீஷ்கார், ஹரியானா, அசாம், சிக்கிம், திரிபுரா, காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும், இந்த சலங்கை நாதம் கலை விழா தஞ்சை மாவட்டம் மனோராவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களும், அணைக்கரையில் நாளை (திங்கட் கிழமை) முதல் 3 நாட்களும், கல்லணையில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 3 நாட்களும், பெல் திருச்சி மற்றும் வடுவூரில் 27-ந் தேதி முதல் 3 நாட்களும் மற்றும் பாபநாசத்தில் 28-ந் தேதி முதல் 3 நாட்களும் நடை பெறுகிறது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top