பேராவூரணி அடுத்த நெல்லியடிக்காடு ஊராட்சியில் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம்
டிசம்பர் 05, 2017
0
பேராவூரணி அடுத்த நெல்லியடிக்காடு ஊராட்சியில் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் தாசில்தார் பாஸ்கரன் தலைமை வகித்தார், வட்ட வழங்கல் அலுவலர் சாந்தகுமார், மண்டல துணை தாசில்தார் அய்யம்பெருமாள் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டையில் குறைபாடுகளை மனு கொடுத்தனர். உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுதாரருக்கு ஆணைகள் வழங்கப்பட்டது. மற்றவைகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில் வருவாய் ஆய்வாலர் சத்யராஜ், வி.ஏ.ஓ மோகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க