தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேராவூரணி ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு பள்ளிகளைச்சேர்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் கோ தமிழ்ச்செல்வி, கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி மற்றும் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் நிகழ்வினைத் தொடங்கி வ
ைத்தனர்.பல்வேறு பள்ளி மாணவர்களின் கலைத்திறன் போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்றது. பாட்டு, பேச்சு, ஓவியம், ஒப்புவித்தல், கையெழுத்து , நடனம், குறு நடகம், கதை சொல்லுதல், மாறுவேடம் போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது.
நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றது பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. இது போன்ற கலைப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டால் மாணவர்கள் திறன் அதிகரிக்கும்.
நன்றி:மெய்ச்சுடர்