பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளையும், அங்குள்ள வடிகால் கால்வாயில் தேங்கியுள்ள கழிவு நீரையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
மேலும், பேருந்து நிலையத்திலுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை, தனியார் பேருந்து தொழிலாளர்கள் ஓய்வறை ஆகியவற்றையும் பார்வையிட்ட ஆட்சியர் அவற்றை தூய்மையாகப் பராமரிக்குமாறு நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அடுத்து, பட்டுக்கோட்டை பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் அழகிரிசாமி மணி மண்டப கட்டுமானப் பணியை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஆர்.கோவிந்தராசு, டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், நகராட்சி ஆணையர் (பொ) தர்மலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நன்றி:தினமணி