பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அளவிலான, தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஓவியம், பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு, மாறுவேடம் என பல்வேறு கலைப் போட்டிகள், ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியில் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளி மாணவிகள் நித்யஶ்ரீ, சிவஶ்ரீ, அபிநயா, கல்பனா, நிலோபர் நிஷா, விஜயராகவி, பிரியதர்சினி ஆகியோர் பங்கேற்று, முதலிடம் மூவர், இரண்டாமிடம் 8 பேர், மூன்றாமிடம் இருவர் என மொத்தம் 13 பரிசுகளைப் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியர் சித்ராதேவி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கௌதமன், ஆசிரியர்கள் ஹாஜாமைதீன், ரேணுகா மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு.
டிசம்பர் 21, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க