சேந்தன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பழுதடைந்த மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறபடுத்த பெற்றோர்கள் கோரிக்கை.
டிசம்பர் 04, 2017
0
பேராவூரணி அருகே உள்ள சேந்தன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது.
பள்ளிக் குழந்தைகளுக்கு விபத்தை உண்டாக்கும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விபத்துக்கள் ஏற்படும் முன்பு அப்புறபடுத்த பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க