பேராவூரணி சேதுசாலையில் அரசு டாஸ்மாக் மதுபா னக்கடையை , வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டவாறு டிசம்பர் 30 அன்று மூடப்படாததைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஜனவரி 8 அன்று பூட்டுப் போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் டிசம்பர் 31 ஞாயிறன்று பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜனவரி 20 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத்தரப்பில் உறுதியளித்ததை தொடர்ந்து, பூட்டுப் போடும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
முன்னதாக அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆவணம் சாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுக்கடை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படலாம் என வந்த தகவலையடுத்து மதுக்கடை முன்பாக 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்ப ட்டிருந்தனர். பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் போலீஸ் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், வட்டா ட்சியர் பாஸ்கரன், கலால் வட்டாட்சியர் கோபி, காவல்துறை ஆய்வாளர்கள் பேராவூரணி ஜனார்த்தனன், திருச்சிற்ற ம்பலம் செந்தில்குமரன் ஆகியோர் அரசுத்தரப்பிலும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி, அமைப்புகள் சார்பில் சிபிஐ பா.பாலசுந்தரம், காசிநாதன், கோபால், சிபிஎம் சார்பில் வீ.கருப்பையன், இரா.வேலுச்சாமி, வே.ரெங்கசாமி, த.ம.பு.க ஆறு.நீலகண்டன், திராவிடர் விடுதலைக்கழகம் சித.திருவேங்கடம், தாமரை செல்வன், மெய்ச்சுடர் வெங்கடேசன், ஆயர் த.ஜேம்ஸ், வீரக்குடி ராசா, ராஜாமணி, பைங்கால் மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்ட அறிவிப்பு எதிரொலி பேராவூரணி சேதுசாலையில் மதுக்கடையை ஜன.20-க்குள் அகற்ற அதிகாரிகள் உறுதி.
ஜனவரி 01, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க