பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜனுக்கு தனிக்கோவில் உள்ளது. இக்கோவில் 700 ஆண்டுகள் பழமையானதாகும். சிதிலம் அடைந்து இருந்த இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் திருப்பணிகள் தொடங்கின. ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவிலின் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக புதிதாக எமதர்மராஜன் சிலை மகாபலிபுரத்தில் வடிவமைக்கப்பட்டு, கோவில் வாளகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல பழைய சிலையும் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு, தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேகம்
வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கோவிலில் தற்போது திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக 19-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. 21-ந் தேதி திருச்சிற்றம்பலம் பாரதி நகரில் இருந்து யானை, குதிரைகளுடன் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினரும், திருச்சிற்றம்பலம் கிராம மக்களும் செய்து வருகின்றனர்.
பேராவூரணி அருகே அருகே எமதர்மராஜன் கோவில் திருப்பணி மும்முரம் 22-ந் தேதி கும்பாபிஷேகம்.
ஜனவரி 18, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க