பட்டுக்கோட்டையில் மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஜன.25) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகச் செயற்பொறியாளர் வி. மாறன் தெரிவித்துள்ளதாவது: பட்டுக்கோட்டை பாளையம் பகுதியிலுள்ள மின் வாரிய கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் டி.என்.சங்கரன் தலைமையில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம்.