பேராவூரணியை அடுத்த திருச்சிற்றம்பலம் அருகே உள்ள மடத்திக்காடு கிராமத்தில் பல வருடங்களாக குடியிருந்து வரும் 38 குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு அரசின் சார்பில் மனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் கிராம கணக்கில் பதிவு செய்யப்படவில்லை எனக்கூறி, அதிகாரிகளால் பட்டா வழங்கப்படவில்லை. 11 வருடங்களாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், பல போராட்டங்களை நடத்தியும் வந்த பொதுமக்கள் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசுவிடம் நேரில் முறையிட்டனர்.
இதையடுத்து பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த வீட்டு மனைப்பட்டா கடந்த 13 ந்தேதி அன்று வழங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பேராவூரணியை அடுத்த மடத்திக்காடு கிராமத்தை சேர்ந்த 38 பேருக்கு எம்எல்ஏக்கள் முன்னிலையில் வீட்டு மனைப்பட்டா வழங்கல்.
ஜனவரி 20, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க