வடகாட்டில் வழுக்குமரம் ஏறும் போட்டி வியாழக்கிழமையன்று நடைபெற்றது. வடகாடு பரமநகர் கிராமத்தில் பொங்கல் திருநாளையொட்டி, பிரண்ட்ஸ் கிளப் நண்பர்கள் சார்பாக சைக்கிள் பந்தயம், ஓட்டப் பந்தயம், பானை உடைத்தல் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. முக்கியபோட்டியான வழுக்குமரம் ஏறும் போட்டி நடைபெற்றது. சுமார் 50 அடி மரத்தை நட்டு மரம் வழுக்கும் விதமாக கிரீஸ், எண்ணெய் போன்றவைகள் தடவப்பட்டிருக்கும். இந்தப் போட்டியில், வடகாடு, பனங்குளம், மழையூர்,புள்ளான்விடுதி உள்பட்ட 10-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்துகொண்டனர். அதில், பனங்குளம் கிங்ஸ் அணியினர் முதல் பரிசான ரூ.21,221-யை பெற்றனர். இதேபோல, நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பொங்கல் திருநாளையொட்டி வடகாட்டில் வழுக்குமரம் ஏறும் போட்டி.
ஜனவரி 20, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க