பேராவூரணி பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம் அநியாய பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஓன்றியம், நகரம் சார்பில், பேராவூரணி இரயில் நிலையம் அருகில் வியாழன் மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகரச்செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமி தலைமை வகித்தார். ஒன்றியச்செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு கண்டன உரையாற்றினார்.
தோழமை அமைப்பு நிர்வாகிகள் த.ம.பு.க கொள்கை பரப்பு செயலாளர் ஆறு.நீலகண்டன், மெய்ச்சுடர் வெங்கடேசன், திராவிடர் விடுதலைக்கழகம் தா.கலைச்செல்வன் ஆதரித்து பேசினர். பூவளூர் மாணிக்கம், மாதர்சங்கம் இந்துமதி, சிஐடியு நீலமோகன், நகரக்குழு எஸ்.ஜகுபர்அலி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி இரயில் நிலையம் அருகில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்.
ஜனவரி 26, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க