பேராவூரணி அடுத்த செருவாவிடுதி தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், அதிகம் கவனிக்கப் பட வேண்டிய தாய்மார்கள், 2 குழந்தைகளுக்கு மேல்உள்ள தாய்மார்கள் ஆகியோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாயன்று நடைபெற்றது.இம்முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். குழந்தை நல மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் அன்பழகன், ஹாஜாமைதீன், மகப்பேறு மருத்துவ அலுவலர் இர்ஷாத் நஸ்ரின் ஆகியோர் பங்கேற்றனர். கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கப்பட்டு, ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டது.
பேராவூரணி அடுத்த செருவாவிடுதி கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.
ஜனவரி 11, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க