பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் பெரியதெற்குக்காடு நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், வியாழன் அன்று 'பிளாஸ்டிக் (நெகிழி) இல்லா உலகு' உறுதிமொழி ஏற்கப்பட்டது
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வீரம்மாள் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இராமநாதன் முன்னிலை வகித்தார். மாணவ,மாணவிகள் 88 பேர் "நான் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை இயன்றவரை தவிர்ப்பேன். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தவே மாட்டேன்" என்ற அட்டைகளை கைகளில் ஏந்தி உறுதிமொழி ஏற்றனர். மாணவர்களுக்கு சென்னை சிறுதுளி அமைப்பைச் சேர்ந்த ஜெயா வெங்கட் உறுதிமொழி அட்டையை அச்சிட்டு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் காந்திமதி, ஜெயந்தி, ரஞ்சிதா, குளோரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி பெரியதெற்குக்காடு நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் பிளாஸ்டிக் இல்லா உலகு உறுதிமொழி ஏற்பு.
ஜனவரி 20, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க