போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன் சற்று முன் தெரிவித்தார்.ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அரசு இடைக்காலமாக அறிவித்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வினை ஏற்று பணிக்கு திரும்புமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். ஆனால் ஊதிய உயர்விற்காக மட்டும் போராட்டம் நடைபெறவில்லை என்றும், நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருவதாகவும் தொழிற்சங்கங்கள் சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது என சிஐடியு சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் நாளை முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.