பேராவூரணி அருகிலுள்ள விளங்குளம் ஊராட்சியில்,கிழக்கு கடற்கரை சாலை அருகே மாருதிபட்டினம் எனும் பகுதியில் சத்திரம் இலாகாவிற்கு சொந்தமான புலன் எண் 242,243ல் பல லட்சம் மதிப்புள்ள மிகப்பெரிய தரிசுநிலம் ஒன்று உள்ளது. இந்நிலத்தை தனியார் ஒரு சிலர் ஆக்கிரமித்து,சத்திரம் அதிகாரிகள் துணையோடு நிலத்தில் ஆங்காங்கே கல் ஊன்றி அடையாளமிட்டு பிளாட் போட்டு பலரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே மேற்படி நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு சத்திரம் இலாகாவிற்கு சொந்தமாக்க ஆவன செய்ய வேண்டும் என ெதரிவித்துள்ளனர்.
பேராவூரணி அருகே சத்திரத்திற்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு.
ஜனவரி 26, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க