பழனி முருகன் கோயிலில் இன்று காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.இதில் தைப்பூச திருவிழா முக்கிய நிகழ்ச்சியான முருகன் -வள்ளி, தெய்வானை திருமண நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி மாதம் 30 ம் தேதியும், தைப்பூச தேரோட்டம் நிகழ்ச்சி ஜன.,31 ம் தேதியும் நடைபெறவுள்ளது.
மேலும் நடைபெறவுள்ள தைப்பூச நிகழ்ச்சிக்கு பழனி கோயில் தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய பிரமுகர்களும், பக்தர்கள்ஏராளமானோர்கள் கலந்துகொண்டனர்.