பேராவூரணி பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தஞ்சைமாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையர்கள் குமரவடிவேல், சித்ரா மற்றும் அதிகாரிகளுடன், ஒன்றியத்தில் நடைபெற்று வரும்பல்வேறு பணிகள் குறித்து கேட்டறிந்தார். அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் ஆகிய பணிகளையும் விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார். பின்னர் ஆவணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டமாவட்ட ஆட்சியர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர், மாணவர்களிடம் பேசுகையில், “வரவிருக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பிடம் பெறவேண்டும். தன்னம்பிக்கையோடு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்” என்றார். அம்மையாண்டி பகுதியில் நடைபெற்று வரும் பசுமை வீடு கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
துலுக்கவிடுதி, ஆவணம் பகுதிகளில் அங்காடிகளில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகிறதா எனக் கேட்டறிந்தார். வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஆய்வு செய்தார்.சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பு பேராவூரணி பயணியர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரையை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு நேரில் சந்தித்து, வரவிருக்கும் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும், பூக்கொல்லைமற்றும் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள காட்டாற்றில் உள்ள பாலத்தை உயர்மட்டப் பாலமாக அமைக்கும் பணியைதுரிதப்படுத்துமாறும் வலியுறுத்தினார்.வாடகைக்கார் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ஏற்கெனவே இருந்தபடி கார்நிறுத்துமிடம் அமைக்க அனுமதி கோரி மனு அளித்தனர். ஆசிரியர் மற்றும் அனைத்துத்துறை அரசு ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள், வீர.சந்திரசேகர், சரவணன், ராகவன்துரை, செல்லதுரை மற்றும் தமிழ் ஆர்வலர் தங்கவேலனார் ஆகியோர் தலைவர் புலவர் சு.போசு தலைமையில் சந்தித்து பேராவூரணியில் திருவள்ளுவர் சிலை அமைக்க அனுமதி கோரி மனு அளித்தனர்.
பேராவூரணியில் திட்டப்பணிகளை தஞ்சைமாவட்ட ஆட்சியர் ஆய்வு.
பிப்ரவரி 02, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க