பேராவூரணி வேளாண்மை வட்டாரத்தில் நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்.

Unknown
0


பேராவூரணி வேளாண்மை வட்டாரத்தில் நடப்பு ராபி பருவத்தில் சுமார் 1500 ஏக்கர்பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலையை பொருத்தமட்டில் இளம் பயிர்களில் சுருள் பூச்சி தாக்குதலும், சற்றுவளர்ந்த பயிர்களில் புரடீனியா புழுவும் பரவலாக தாக்கியுள்ளன.இவற்றை கட்டுப்படுத் திட வயல்களில் இரவு 8 மணிமுதல் 11 மணி வரை விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப் பூச்சியின் நடமாட்டத்தை கண்காணித்து தக்க பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுருள் பூச்சியை கட்டுப் படுத்திட டைகுளோர்வாஸ் 250 மில்லி (அல்லது) குளோர்பைரிபாஸ் 500 மில்லி (அல் லது) மானோகுரோட்டபாஸ் 300 மில்லி. இதில் ஏதேனும்ஒரு மருந்தினை 200 லிட்டர்தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர்பரப்பில் மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

புரடீனியா புழுக்களை கட்டுப்படுத்திட வரப்புகளில்பொறி பயிராக தட்டைப் பயறு, ஆமணக்கு, மக்காச்சோளம் ஆகியவற்றை விதைக்க வேண்டும். இதனால் தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும். நன்மை செய்யும்பூச்சிகள் பெருக வாய்ப்புள் ளது. வயல்களில் உள்ள புழுக்களை தின்று அழிக்கும் வகையில் பறவைகள் வந்துஅமர்வதற்கு இருக்கைகள் அமைக்க வேண்டும். நிலக்கடலை மற்றும் பொறிப்பயிர் களின் இலைகளில் உள்ளஇளம் புழுக்களை கையால்எடுத்து நசுக்கி அழிக்கவேண்டும். புரடீனியா தாய்அந்துப் பூச்சிகளுக்குண் டான இனக்கவர்ச்சி பொறியினை வயலில் 4 - 5 இடங்களில் வைக்க வேண்டும். 100 புரடீனியா புழுக்களிலிருந்து சேகரிக்கப்பட்ட என்.பி.வி.வைரஸ் கரைசலை 200 லிட்டர் தண்ணீரில் கலந்துஅதோடு 1 கிலோ வெல்லப் பாகு மற்றும் 100 மில்லி ஒட்டுத்திரவம்(டீபால்) கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.நோய்களை பொறுத்தமட்டில் வேர் அழுகல் நோய்,துருநோய், டிக்கா இலைப்புள்ளி நோய் முக்கியமானதாகும்.

வேர் அழுகல் நோயைகட்டுப்படுத்திட ஒரு ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பாக்டீரியாவை 20 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து விதை விதைத்த 30 நாட்கள் கழித்து செடியை சுற்றி வைத்து மண் அணைக்க வேண்டும்.துருநோய் மற்றும் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்திட ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசிம் 100 கிராம் மற்றும் மேங்கோசெப் 400 கிராம் (அல்லது) குளோரோதளோனில் 400 கிராம். இதில் ஏதேனும் ஒன்றினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.இவ்வாறு நிலக்கடலையில் பூச்சி, நோய்கள் கட்டுப்படுத்துவது பற்றி பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் தமது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top