பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் பிள்ளையார் திடலில் மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமை பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ்வரவேற்றார்.மருத்துவ அலுவலர்கள் இராமலிங்கம், இளவரசி, காவிய ப்ரீத்தி, ஷர்மிளா மற்றும் செவிலியர்கள், சுகாதாரத் துறைப் பணியாளர்கள் 850-க்கும் மேற்பட்டபொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இதில் 12 பேர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். பொதுமக்களுக்கு இசிஜி, ரத்தப்பரிசோதனை, பொது மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது. வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் மற்றும் பிள்ளையார்திடல், வெளிமடம், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி அருகே மருத்துவ முகாம்.
பிப்ரவரி 21, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க