பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் தெருவிலுள்ள தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான ஸ்ரீதேவி-பூமிதேவி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு, மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.4) காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை வாஸ்து சாந்தி, மகாகணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல, சனிக்கிழமை (பிப்.3) காலை மகா சாந்தி ஹோமம், அக்னி ஆராதனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், இரவு 7 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை (பிப்.4) காலை 8.30 மணிக்கு யாகசாலையிலிருந்து அனைத்து கும்பங்களும் அந்தந்த விமான கோபுரத்தை சென்றடையும். காலை 9.15 மணிக்கு சமகாலத்தில் அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு பெருமாள் வீதியுலாவும், இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடைபெறவுள்ளன.