பேராவூரணி ஆனந்தவள்ளி பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் தஞ்சை ஆட்சியருக்கு கோரிக்கை.

Unknown
0
பேராவூரணியில்  பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என செங் கொல்லை பகுதி பொதுமக்கள் சார்பாக சண்.கஜேந்திரன் என்பவர் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு மனுவை அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது, “தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகரில் 8, 9ஆகிய வார்டுகளில் பழைய பேருந்துநிலையம் பின்புறம் செங்கொல்லையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள்வசித்து வருகிறோம். இதையொட்டி உள்ள நகரின் மையத்தில் கடைவீதியை ஒட்டி ஆனந்தவள்ளி வாய்க்கால் என்னும் பாசன வாய்க்கால் உள்ளது.இந்த வாய்க்காலில் இரண்டு கரையின் ஓரத்தில் குடியிருப்பவர்களும், மற்றவர்களும் குழாய் அமைத்து தங்கள் வீடுகளில் இருந்து கழிவுநீரை பாசன வாய்க்காலில் வெளியேற்றுகின்றனர். மேலும் வீடுகளில் உள்ள குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

இதனால் பாசன வாய்க்காலில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்கிசாக்கடையாக மாறி விட்டது. இந்த சாக்கடை நீரில் பன்றிகள் படுத்து புரள்கிறது. மேலும் கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. தேங்கி கிடக்கும் சாக் கடை நீரில் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றது. எனவே நகரெங்கும் கொசுக்கடியால் குழந்தைகள், பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. இதனால் பல தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மர்ம காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனை பேராவூரணி பொதுப் பணித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. மேலும் கடந்த 1 வருடமாக இப்பகுதியில் உள்ள தெரு குழாய்களில் குடிதண்ணீரும் வருவதில்லை. தெரு விளக்குகளும் இரவில்எரிவதில்லை. பேரூராட்சி அலுவலர்களும் குறைகளை தீர்ப்பதில் அக் கறை செலுத்துவதில்லை.எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.



 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top