பேராவூரணி அடுத்த பின்னவாசல் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடம் கோவிந்தராசு எம்எல்ஏ திறந்து வைத்தார்.
பிப்ரவரி 04, 2018
0
பேராவூரணி அடுத்த பின்னவாசல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு திறந்து வைத்தார்.பின்னவாசல் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் அடிப்படையில், நபார்ட் நிதி உதவியுடன் ரூ.1 கோடியே 12 இலட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில், 6 வகுப்பறை மற்றும் அறிவியல் ஆய்வகம், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. மேலும் ரூ.3 லட்சம் மதிப்பிலான இருக்கை மற்றும் தளவாடப் பொருட்களை வழங்கி பேசினார்.இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ரெங்கநாதன், ஆசிரியர் திருநாவுக்கரசு, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.பெரியய்யா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க