பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை சார்பில் வியாழன் அன்று பாரதிதாசன் இலக்கிய மன்ற விழாநடைபெற்றது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் கிளாடிஸ் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் சி.இராணி அறிமுக உரையாற்றினார். தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சு.சத்தியா ‘இலக்கிய இன்பம்’என்ற தலைப்பில் சொற் பொழிவாற்றினார்.மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற் றது. தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஜே.உமா நன்றிகூறினார். வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தமிழ்த்துறை தலைவர் முனைவர் சி.இராணி (பொறுப்பு முதல்வர்) தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் முனைவர்பழனிவேலு வரவேற்றார். பாண்டிச்சேரி தாகூர் கலைக்கல்லூரி பேராசிரியர் வி.சுகுமாரன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேராசியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் இலக்கிய மன்ற விழா.
பிப்ரவரி 03, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க