பேராவூரணி அருகே பூக்கொல்லையி லிருந்து உடையநாடு, மரக்காவலசை வழியாக கழுமங்குடாகிழக்கு கடற்கரை சாலை வரை செல்லும்தார்ச்சாலை சேதமடைந்த நிலையில் குண்டுங்குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சாலையை சரிசெய்யாவிட்டால் மக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பேராவூரணியை அடுத்த பூக்கொல்லையில் இருந்து கழனிக்கோட்டை, முடச்சிக் காடு, வீரியங்கோட்டை, உடையநாடு, மரக்காவலசை வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் காரங்குடா என்ற இடத்தில் சென்று சேரும்சுமார் 7 கிலோ மீட்டர் நீளமுள்ள தார்ச்சாலைகடந்த பல ஆண்டுகளாகவே, எவ்வித பராமரிப்பும் இன்றி மிகவும் சேதமடைந்த நிலையில்மண் சாலையாக காட்சி அளிக்கிறது.
ஆங்காங்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு குண்டுங்குழியுமாக உள்ள இச்சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடையநாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஏராளமான மாணவர்கள் இவ்வழியே சென்று வருகின்றனர். மேலும் பேராவூரணிக்கு மருத்துவமனை, அரசு அலுவலகங் கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு ஏராளமானோர் தினசரி பயணிக்கின்றனர். மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் கடற்கரை துறைமுகப் பகுதிகளில் இருந்து, தினசரிஏராளமான வாகனங்கள் கடல் உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருச்சி, மதுரை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு பயணிக்கின்றன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தஇச்சாலை வழியே செல்லும் பேருந்துகளுக்கு பின்னால் எவரும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. இவ்வழியாக தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள், நகர பேருந்துகள், தனியார் பேருந்துகள் சென்று வருவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி கூறுகையில், “ நான்கைந்து ஆண்டுகளாகவே இந்த சாலைசீரமைக்கப்படாமல் உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை சரிசெய்யப்படாமல் உள்ளது. உடனடியாக சாலையை சீரமைக்காவிட்டால், மக்களை திரட்டி பூக்கொல்லை கடைவீதியில் சாலைமறியல் நடத்தப்படும்” என்றார்.
பேராவூரணி அடுத்த உடையநாடு செல்லும் சாலையை சீரமைக்க சிபிஎம் கோரிக்கை.
பிப்ரவரி 03, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க