பேராவூரணி அடுத்த காலகம் ஊராட்சியில் திமுக தொண்டர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. காலகம் ஊராட்சிக் கழக அவைத்தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் பழனிவேல், தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டர்களின் நிறை குறைகளை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திருவோணம் ஒன்றிய திமுக செயலருமான மகேஷ்கிருஷ்ணசாமி கேட்டறிந்தார். மார்ச்1- ஸ்டாலின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடுவது. ஈரோடு மாநாட்டில் திரளானோர் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய பொறுப்பாளர் க. அன்பழகன், முன்னாள் ஒன்றியச் செயலர் சுப. சேகர், பேராவூரணி நகர திமுக செயலர் கோ. நீலகண்டன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோ. அருள், வழக்குரைஞர் கருணாகரன், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
பேராவூரணி அடுத்த காலகம் ஊராட்சியில் திமுக தொண்டர்கள் கலந்தாய்வுக் கூட்டம்.
பிப்ரவரி 18, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க