காரைக்குடி- திருவாரூர் அகல இரயில்பாதை பணிகளுக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு இப்பகுதியில்இரயில் சேவை நிறுத்தப்பட்டது.5 ஆண்டுகள் ஆன நிலையில் காரைக்குடி- பட்டுக்கோட்டைக்கு இடையே சுமார் 76 கிலோமீட்டர் பணிகள் முழுவதுமாக பூர்த்தியடைந்தன. பட்டுக்கோட்டை- திருவாரூர் வரையிலான அகலப்பாதை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.பணிகள் முடிவடைந்த நிலையில்வெள்ளிக்கிழமையன்று காரைக்குடி-பட்டுக்கோட்டை பாதையில் ஒரு நாள்பயணிகள் ரயில் போக்குவரத்து பரிசோதனை ஓட்டம் நடைபெற்றது.காரைக்குடியில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்ட டிஇஎம்யு பணிகள் ரயில் அறந்தாங்கி வழியாக பேராவூரணிக்கு காலை 11.45 மணிக்கு வந்தடைந்தது. பேராவூரணியில் இரயில் பயணிகள் மற்றும் பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர்.
இரண்டு நிமிடம் நின்ற பின்பு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு 12.40 மணிக்கு சென்றடைந்தது. பின்பு இதே மார்க்கத்தில் பட்டுக்கோட்டையில் மாலை 3 மணிக்குபுறப்பட்டு ஒட்டங்காடு, பேராவூரணி,ஆயிங்குடி, அறந்தாங்கி, வாளரமாணிக்கம், பெரியகோட்டை, கண்டனூர்-புதுவயல் நிறுத்தங்களில் நின்றுமாலை 6 மணிக்கு காரைக்குடி சென்றடைந்தது. 6 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற இரயில் போக்குவரத்து காரணமாக இப்பகுதி மக்கள், வர்த்தகர்கள், மாணவர்கள், இரயில் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வரவேற்பு தெரிவித்தனர்.
ஏராளமான பயணிகள் இரயிலில் பயணம் செய்தனர்.இரயில்வே அதிகாரிகள் தரப்பில்பேசியபோது, “ நேற்று (வெள்ளி) ஒரு நாள் மட்டும் இரயில் பயணிகளோடு சோதனை ஓட்டம் நடக்கிறது. தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்தபின், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்று முறைப்படி இரயில் சேவையை தொடங்கி வைப்பர். இதற்கான தேதி பிறகு அதிகாரிகளால் அறிவிக்கப்படும்” என்றனர். முதற்கட்டமாக காரைக் குடி - பட்டுக்கோட்டை இடையே ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் பயணிகள் இரயில் சேவை தொடங்கப்பட்டு, இரண்டு இரயில்கள் இயக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
நன்றி:தீக்கதிர்
காரைக்குடி- பட்டுக்கோட்டை பயணிகளுடன் ரயில் சோதனை ஓட்டம்
மார்ச் 31, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க