நகரம் பாலசுப்பிரமணியர் கோயில் வைரத்தேர் வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு.

Unknown
0
நகரம் பாலசுப்பிரமணியர் கோயில் வைரத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. நகரம் கிராமத்தில் பழமையான தென்பழனிமலை பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இக்கோயில் பங்குனி உத்திர திருவிழாகொடி ஏற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் வரை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருவிழா நாளை கொடிஏற்றத்துடன் தொடங்குகிறது.

இந்நிலையில், கோயில் தேர் சிதிலமடைந்திருந்ததால் கடந்த சில ஆண்டுகளாக தேர் திருப்பணிகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று வானவேடிக்கையுடன் வைரத்தேர்  வெள்ளோட்டம் நடந்தது. வைரத் தேரை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்ட தேர் மாலை நிலைக்கு வந்தது. தேர்வெள்ளோட்டத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கிராமங்களில் உள்ள கோயில்களில் நடக்கும் திருவிழாக்களில் பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்து பழம், தேங்காய், பட்டு, மாலை போன்ற பூஜை பொருட்களுடன் ஊர்வலமாக சீர் கொண்டு சென்று மரியாதை செய்வது வழக்கம். அதேபோல பாலசுப்பிரமணியர் கோயில் தேர் வெள்ளோட்டத்தையொட்டி, செரியலூர், கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், மேற்பனைக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் வானவேடிக்கைகளுடன் சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.







கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top