பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் காட்டாற்று பாலத்தில் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு காட்டாற்று பாலம் உள்ளது. இந்த பாலத்தில் ஆங்காங்கே சிறுசிறு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது எதிரே வருகின்ற வாகனங்களுக்காக ஒதுங்கும்போது பள்ளத்தில் விழுவதும், தவறி பாலத்திற்குள் விழுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் மக்கள் படுகாயமடைகின்றனர்.போக்குவரத்து அதிகமான இந்த பாதையில் நீண்ட நாட்களாக பாலத்தில் உள்ள பள்ளம் மூடப்படாமல் உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக பாலத்தில் உள்ள சிறுசிறு பள்ளங்களை மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச்செயலாளர் ஏ.வி.குமாரசாமி, நெடுஞ்சாலை துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலை காட்டாற்று பாலத்தின் பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை.
மார்ச் 27, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க