வீரியங்கோட்டை- உடையநாடு ராஜராஜன் நர்சரி- பிரைமரி பள்ளியின் 22 ஆம் ஆண்டு விழா ஞாயிறன்றுநடைபெற்றது.விழாவிற்கு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் என்.குலாம்கனி தலைமை வகித்தார். மாணவி எஸ்.ஹமீது சபுரா வரவேற்றார். தஞ்சாவூர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெ.ரெத்தினவேல், தமிழ்நாடு உடற் கல்விஆசிரியர்கள், இயக்குநர்கள் சங்க மாநிலத் தலைவர் டி.ரவிசந்தர் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர்.திரைப்பட பின்னணி பாடகர் வி.செந்தில்தாஸ் பல்வேறுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். பெற்றோர் - ஆசிரியர் கழக துணைத் தலைவர் பி.ரமேஷ் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர்செய்திருந்தார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி அடுத்த ராஜராஜன் நர்சரி பள்ளியில் ஆண்டு விழா.
மார்ச் 28, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க