பேராவூரணி அடுத்த ஆணைக்காடு பகுதியில் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வுகாண கோரிக்கை.

Unknown
0
பேராவூரணி அடுத்த ஆனைக்காடு கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேராவூரணி ஒன்றியம் காலகம் ஊராட்சியை சேர்ந்த ஆனைக்காடு கிராமத்தில் 350 குடும்பங்களை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஆனைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் ஆழ்குழாய் கிணறுடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 1996ம் ஆண்டு கட்டப்பட்டது. இதைதொடர்து நீர்த்தேக்க தொட்டியிலிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் ஆனைக்காடு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை.
இதுகுறித்து தஞ்சை கலெக்டருக்கு கிராம மக்கள் சார்பில் தமாகா இளைஞரணி வட்டார தலைவர் சிதம்பரம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் ஆனைக்காடு கிராமத்தில் கடந்த 15 நாட்களாக சீரான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top